Wednesday, August 5, 2015

20ம் நூற்றாண்டு தமிழ் விளம்பரம்

மலாயாவின் சுதந்திரத்திற்கு முந்தைய விளம்பரங்கள் அக்கால நிலையை விளக்கும் நல்ல ஆவணங்கள். இன்றும் மலேசிய மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நெஸ்டம் என்ற கேழ்வரகு,பார்லி கலந்த நெஸ்டம் என்ற காலை உணவு விளம்பரத்தை இங்கே காணலாம். இதில் சிறப்பு என்னவென்றால் முன்னர் மலாயாவில் வழக்கில் இருந்த காவி எழுத்தும் தமிழ் எழுத்தும் சேர்ந்து இந்த விளம்பரத்தில் இருப்பதைக் காணலாம்.
அனுப்பி உதவிய நண்பர் கோவிந்த பாலாவுக்கு நம் நன்றி.




சுபா

1 comment:

  1. இஸ்லாமிய கிருத்துவ இந்து சமயங்களை இணைத்து பானம் அருந்துபவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறார்கள்.சமய ஒற்றுமையையும் இந்த விளம்பரம் காண்பிப்பதாகத் தோன்றுகிறது .நெஸ்டம் என்ற சொல்லுக்கு மோனையாக நெக்டர் என்றசொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
    தமிழ்நாட்டில் திரையிசைப்பாடல்களில் இப்படிப்பட்ட எதுகை மோனை முறைகள் வந்து விட்டன.
    ..,.........
    மலாயா என்ற நாட்டின் பெயர் பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது. என் துணைவியாரின் பாட்டனார் ஜித்ரா கிடா என்ற ஊரில் ரப்பர் எஸ்டேட் வைத்துக்கொண்டிருந்தார்... இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் பிற்பகுதியில் எல்லாவற்றையும் விற்றுவிட்டுச் சொந்த ஊருக்கு வந்துவிட்டார்...P.D.Nagaraja Pillai கும்பகோணத்துக்கு பக்கத்தில் திருநாகேஸ்வரம்...... அவர் அங்கே ஒரு மாரியம்மன் கோயில் கட்டியதாக சில குறிப்புகள் எங்கள் வீட்டில் இருக்கும்... அன்பு கூர்ந்து அந்த க்கோயில் இப்போது வணங்குமுறையில் இருக்கிறதா என்று உங்களால் சொல்ல முடியுமா?

    ReplyDelete